7/28/2008

வேண்டாம் இனி இந்த வேதனை-இறைவா வரம் தருவாய்.

லங்கையில் பிறக்கும்,
ஒவ்வொரு தமிழ் குலகும்(பிள்ளை)...
வளரும் போதே கூடிக்குலவவும் ,
ஓடி விளையாடவும் இயலாத விதி...
விதி செய்யப்பாடாத,விதியாய்...
மற்றான் செய்த சதியாய் விதி!
வீதியில் என்னேரமும்,மரணத்தின் ஓலம்.
விடிகிற ஒவ்வொரு விடியலும் கேள்வி குறியாய்!
ஒவ்வொரு கணமும் .. நெருப்புக்கணங்கள்.
இருக்கும் உறவுகள் அடுத்த நேரம் இருப்பதில்லை.
சந்தோசத்தருணங்களை தும்பி பிடிப்பதைபோல் தேடிப்போய்,
ஓடித்தான் பெறமுடியும் என்ற சாபங்கள்.
வளரும் போதே தெரியாமல்,
ஒரு நீண்ட பயணத்திற்கு தயாராகும் அவலங்கள்.
அப்பயணம் அகதியெனும் முத்திரையே தகுதியாய்..
ஊர் விட்டு,உறவை விட்டு..
என்று தீரும் இந்த கொடுமைகள்.?
என்று தம் பிறந்த மண் திரும்பும் இக்குலகுகளின் சொந்தங்கள்.?
காலம் திரும்புமா?-
இல்லை சாபம் தொடருமா?

No comments:

About Me