7/30/2008

முன்னேற்றமென்ற ஏமாற்று!

அன்று காந்தி கையில் கோல்லிருந்தது ஊன்றுகோல்!
இன்று நாமும் கோலேந்த வேண்டும் தற்காப்பு கோல்!
நாடு நாகரிகம் எனும் பெயரில் முன்னேறியுள்ளது, நாகரீகச்சிதைவுகளில்.
அறிவியல் வளர்ச்சியைவிட -அறியாமையின் வளர்ச்சிவீதம் அதிகம்.
மேலுட்டமாய் தெரிந்து கொண்டு, மெத்த படித்தவர் போல் நாடகமும்!
மெத்த படித்தவர் கண் மூடி கொண்ட அவலமும்.
கல்விக்கண் நாட்டை இருட்டாக்கிவிட்ட கொடுமையும்!
இன்று,இப்போது இந்தியா ஒளிர்கிறது -
மத துவேச சுட்டெரிக்கும் வெளிச்சத்தில்.
மக்களெல்லாம் அச்சத்தில்.

No comments:

About Me