11/13/2009

(மது)கோடான கோடி ஊழல்.

ஜாம்ஷெட்பூர்: ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மது கோடா மீதான ஊழல் புகாரை விசாரித்து வரும் குழுவில் இடம் பெற்றுள்ள வருமான வரித்துறை இன்ஸ்பெக்டரின் மகன் தாக்கப்பட்டார்.

ரூ. 4000 கோடி அளவுக்கு பெரும் ஊழலில் ஈடுபட்டதாக மது கோடா மீது புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினரும், அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணை க் குழுவில் இடம் பெற்றுள்ளவருமான வருமான வரித்துறை இன்ஸ்பெக்டர் ஏ.கே.மாஜி என்பவரின் மகன் அபிஷேக் மாஜி. இவர் செனாப் சாலையில் நேற்று மாலை வந்து கொண்டிருந்தபோது இரண்டு பேர் அவரை கற்களால் தாக்கி காயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்று விட்டனர்.

அபிஷேக் மாஜி காயமடைந்து கீழே விழுந்த போதும் விடாமல் அவரைத் தாக்கியுள்ளனர். பின்னர் போகும்போது அபிஷேக்கின் செல்போனை பறித்துக் கொண்டு போய் விட்டனர்.

தலையில் காயமடைந்த அபிஷேக், டாடா மெயின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

கோடா வழக்கை விசாரித்து வரும் குழுவைச் சேர்ந்த இன்ஸ்பெக்டரின் மகன் தாக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த பாஜக தலைவராக புதிதாய் ஒரு காட்டேறி?

டெல்லி: அடுத்த பாஜக தலைவராக மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த நிதின் கட்காரி பொறுப்பேற்கவுள்ளார்.

தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள பாஜகவின் செயல்பாடுகளை ஆர்எஸ்எஸ் நேரடியாக கையில் எடுத்துக் கொண்டுள்ளது. அத்வானி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை பதவி விலகச் சொல்லிவிட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பாஜக தலைவர் பதவிக்கு நிதின் கட்காரியை இறுதி செய்துவிட்டதாகத் தெரிகிறது.

மகாராஷ்டிரததைச் சேர்ந்தவரான கட்காரி அம் மாநில பாஜக தலைவராக உள்ளார். பிராமண சமூகத்தைச் சேர்ந்த இவர் ஆர்எஸ்எஸ் தலைமைக்கும் மிக நெருக்கமானவர் ஆவார்.

ராஜ்நாத்தையடுத்த அந்தப் பதவியைப் பிடிக்க அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ், முரளி மனோகர் ஜோஷி, அனந்த் குமார், வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் போட்டியிட்டாலும் அடுத்த தலைவர் டெல்லியை மையமாகக் கொண்டு செயல்படுபவராக இருக்கக் கூடாது என்று கூறிவிட்டது ஆர்எஸ்எஸ்.

இதையடுத்து நிதின் கட்காரியை மோகன் பகவத்தே தேர்வு செய்துள்ளார்.

இந்தப் பதவிக்கு கோவா மாநில பாஜக தலைவர் பரிக்கரின் பெயரும் அடிபட்டது. ஆனால், அத்வானி யை ஊசிப்போன ஊறுகாய் என விமர்சித்ததால் அவருக்கு வாய்ப்பு அடிபட்டுப் போய்விட்டதாகக் கூறப்படுகிறது.

இந் நிலையில் நேற்று டெல்லி வந்த கட்காரி மூத்த ஆர்எஸ்எஸ் தலைவர் களுடன் ஆலோசனை நடத்தினார்.

ராஜ்நாத் சிங்கின் பதவிக் காலம் டிசம்பர் மாத இறுதியில் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.
பாஜக ஒரு காட்டேறிகளின் கட்சி இதற்கு புது காட்டேறி தலைமைத்தாங்குவதால் அந்த கட்ட்சி புணித மாக மாறிடுமா? எல்லாம் ஆர்.ஸ்.ஸ்காட்டேறிகளின் கூட்டம்தானே? இருக்கிற கொஞ்ச நஞ்ச ஓட்டு வங்கியையும் காப்பத்திக்கணும்னா ஆர்.ஸ்.ஸ் இடமிருந்து ஒதுங்கிருந்தாலே போதும் இல்லையென்றால் தன் தலைக்கு தனே கத்தி வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.
crown

11/06/2009

கொலையும் செய்யும் சாதிவெறி!

சென்னை: தலித் இளைஞரை திருமணம் செய்த பெண் தந்தை மற்றும் உறவினரால் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

திருச்சியைச் சேர்ந்தவர் ஸ்ரீபிரியா (21). பி.எட் படித்து வந்தார். கள்ளர் சமூகத்தை சேர்ந்த இவர், தன்னுடன் படித்த பத்ரகாளி என்ற தலித் இளைஞரை காதலித்தார். கடந்த 29ம் தேதி இருவரும் வீட்டிற்கு தெரியாமல், சேலத்துக்கு சென்று திருமணம் செய்துகொண்டனர்.

உடுமலைப்பேட்டை அருகில் உள்ள மடத்துக்குளத்தில், பத்ரகாளியின் சகோதரி வீட்டில் இருவரும் தங்கினர். கலப்பு திருமணத்தால், ஸ்ரீபிரியாவின் பெற்றோர் மிகுந்த ஆத்திரம் அடைந்தனர். இதனால், தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று பழனி அனைத்து மகளிர்
காவல் நிலையத்தில் ஸ்ரீபிரியா சார்பில் புகார் தரப்பட்டது.

இதையடுத்து, ஸ்ரீபிரியாவின் தந்தையும், உறவினர்களும் கடந்த மாதம் 5ம் தேதி பழனிக்கு வந்து போலீசார் முன்னிலையில், 'ஸ்ரீபிரியாவுடன் இனி எந்த ஒட்டுறவும் இல்லை' என எழுதி கொடுத்துவிட்டு கோய்விட்டனர். இந்நிலையில், கடந்த புதன்கிழமை, ஸ்ரீபிரியாவைத் தேடி
அவரின் தந்தை சீனிவாசன், மருமகன் ஆசைத்தம்பி மற்றும் உறவினர் பன்னாடி ஆகியோர் மடத்துக்குளம் வந்தனர்.

பத்ரகாளி வீட்டில் இல்லாத நிலையில், ஸ்ரீபிரியாவை தன்னுடன் வருமாறு தந்தை சீனிவாசன் வற்புறுத்தியுள்ளார். ஸ்ரீபிரியா பிடிவாதமாக மறுத்ததால், மூன்று பேரும் கோபமாக வெளியே சென்றனர்.

சற்று நேரத்திற்கு பிறகு, ஆசைத்தம்பியும் பன்னாடியும் மீண்டும் ஸ்ரீபிரியா இருக்கும் வீட்டிற்குள் நுழைந்தனர். அப்போது, அங்கிருந்த பத்ரகாளியின் சகோதரி அவர்களை தடுத்துள்ளார். ஆனால், அவரை கத்தியை காட்டி மிரட்டிவிட்டு இருவரும் உள்ளே சென்று ஸ்ரீபிரியாவை
தாறுமாறாக பிடித்து இழுத்தும், காட்டுமிராண்டித்தனமாக அடித்து உதைத்தும் கொடுமைபடுத்தியுள்ளனர்.

இதில், ஸ்ரீபிரியாவின் கழுத்து, மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டு, சற்று நேரத்தில் ஸ்ரீபிரியா பரிதாபமாக உயிரிழந்தார்.

உடுமலைபேட்டை போலீசார் ஸ்ரீபிரியாவின் தந்தை சீனிவாசன் (65), மருமகன் ஆசைத்தம்பி என்கிற ராஜ்கண்ணன் (27) மற்றும் பன்னாடி (30) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

ஸ்ரீபிரியாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பத்ரகாளி உறவினரிடம் வழங்கப்பட்டது. சம்பவம் குறித்து பத்ரகாளியின் சகோதரி கணவர் சந்திரசேகர் கூறுகையில், ஸ்ரீபிரியா சாவதற்கு சில நிமிடங்களுக்கு முன் என்னுடன் பேசினார். அப்போதும் அவள் தந்தை மீது நம்பிக்கை வைத்து தான் பேசினாள். அப்பா மனசு மாறிடும் என்று தான் கூறினாள். இப்படி செய்வாங்கன்னு கொஞ்சம் பொறி தட்டியிருந்தா புள்ளைய காப்பாத்தியிருப்போம் என்றார்.

'ஜாதியின் கவுரவத்தையும், குடு்ம்ப மானத்தையும் காப்பாற்றுகிறோம் என்ற பேரில், அடித்து கொலை செய்வதை கருணைக் கொலை என்று நியாயப்படுத்த முடியாது. ஒரு பெண்ணை மார்பில் குத்தி காயப்படுத்துவது தான் ஜாதியை காப்பாற்றும் அழகா? தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவம் கடந்த 2 ஆண்டில் மட்டும் 7 முறை நடந்துள்ளது என்று இந்த சம்பவம் குறித்து எவிடன்ஸ் என்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த கதிர் கூறினார்

10/19/2009

சிறுத்து போன (விடுதலை?)சிறுத்தைகளும் நமத்துபோன அறிகைகளும்.

சென்னை, அக். 19: இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேச போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என உலக நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.
மேலும் இக் கோரிக்கையை வலியுறுத்தி கட்சியின் சார்பில் வரும் 22-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இலங்கைத் தமிழர்களின் வாழ்நிலையை நேரில் ஆய்வு செய்த தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழு தனது அறிக்கையில், எதிர்க்கட்சிகளின் அவதூறுக்கு மாறாக தமிழர்களின் அவல நிலையை உள்ளது உள்ளபடியே வெளிப்படுத்தியது.
அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் அங்கே தலைவிரித்தாடுகின்றன. மக்களிடையே மன அழுத்தங்களும், அச்சமும் மோலோங்கி நிற்கின்றன. கால் வயிற்று கஞ்சிக்காக கையேந்தி நிற்கிறார்கள். மெலிந்த உடல்களிலிருந்து ஏக்கப் பெருமூச்சுகளும், முனகல்களும் மட்டுமே வெளிப்படுகின்றன. ""எங்களை ஒட்டுமொத்தமாக நஞ்சு வைத்துக் கொன்று விடுங்கள் அய்யா '' என்று சிலர் கதறி அழுதனர்.
2 பேர் மட்டுமே படுத்து எழக் கூடிய கூடாரங்களில் 10 பேர் வரை மனிதாபிமானமற்ற முறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தண்ணீருக்காக அவர்கள் படும்பாட்டை சொற்களால் விவரிக்க முடியாது.
இலங்கை ராணுவ ஆட்சியின் கொடுமைகளை எம்.பி.க்கள் குழு உலக அரங்கில் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. இந்நிலையில் இந்திய அரசு இலங்கை அரசோடு கொண்டிருந்த நட்புறவின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களின் வாழ்வுக்காக மேலும் ரூ.500 கோடி வழங்கத் தீர்மானித்துள்ளது.
மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமானப் பணிகளுக்காக உதவ வேண்டுமென்பது இன்றியமையாத ஒன்று. எனினும் இலங்கை இனவெறி ஆட்சியாளர்களின் ஈவிரக்கமற்ற மனித உரிமை மீறல்களை உலக அரங்கில் அம்பலப்படுத்த வேண்டியதும் அவசியம்.
பொருளாதார தடையும்... எனவே இலங்கை இன வெறி ஆட்சியாளர்களை குறிப்பாக, ராஜபட்ச மற்றும் அவரது சகோதரர்களை சர்வதேச போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும்; இலங்கை அரசுக்கு உலக அளவில் பொருளாதார தடை விதிக்க வேண்டும் என இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் சென்னையில் நடத்தப்படுகிறது என திருமாவளவன் அதில் தெரிவித்துள்ளார்.
அதிருப்தி எதிரொலி: இலங்கை சென்றபோது அந்நாட்டு அதிபர் ராஜபட்சவுடன் திருமாவளவன் கைகுலுக்கியதையும், அவருடன் ஆலோசனை நடத்தியதையும் பல்வேறு தமிழ் அமைப்புகள் முன்னதாக குறைக்கூறி அதிருப்தி தெரிவித்திருந்தன. இந்நிலையில் இலங்கையில் இருந்து சென்னை திரும்பிய ஒருவாரத்துக்கு பிறகு இத்தகைய அறிக்கையை திருமாவளவன் வெளியிட்டுள்ளார்.

10/11/2009

பிஞ்சிலேயே பழுத்த வம்பு நாயகன்.

பிஞ்சிலேயே பழுத்த வம்பு நாயகன்.வீட்டு முன் வெளியூர்க்காரர் ஒருவர் காரை நிறுத்தியதால் தகராறு ஏற்பட்டு போலீஸ் பிரச்சினையாகி உள்ளது.

சென்னை தியாகராய நகரில் இந்தி பிரசார சபா சாலையில் நடிகர் பிஞ்சிலேயே பழுத்த வம்பு நாயகன்.வின் வீடு உள்ளது. இந்த வீட்டை ஒட்டியுள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்கள் வாகனங்களை சிம்புவின் வீட்டு முன்பு ரோட்டில் நிறுத்தி விடுகின்றனர். இதனால் பிஞ்சிலேயே பழுத்த வம்பு நாயகன். வீட்டாருக்கும் வாகனம் நிறுத்துபவர்களுக்கும் இடையே பெரும் பிரச்சினை இருந்து வந்தது.

இந்த நிலையில் இன்று அந்த மண்டபத்தில் நடந்த திருமணத்துக்கு வந்த ஒருவர் தனது காரை சிம்பு வீட்டு முன்பு நிறுத்தினார். இதற்கு சிம்புவின் வீட்டு வாட்ச்மேன் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் அந்த நபருக்கும், வாட்ச்மேனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைப் பார்த்ததும் வாட்ச்மேன் முரளிக்கு ஆதரவாக சிம்பு வீட்டில் இருந்து பலர் திரண்டு விட்டனராம். கிட்டத்தட்ட அடிப்பது போல பாய்ந்து வந்துள்ளனர்.

இதையடுத்து காரை நிறுத்திய நபருக்கு ஆதரவாக திருமணத்துக்கு வந்தவர்களும் கூட்டமாக சிம்பு வீட்டு முன் திரண்டு பெரும் ரகளையில் இறங்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக சிம்பு வீட்டிலிருந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தி.நகர் ஆய்வாளர் சரவணன் அங்கு விரைந்து வந்து வாட்ச்மேன் முரளியிடம் விசாரணை நடத்தினார்.

பின்னர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்

10/04/2009

வெளுத்தது காவிகளின் சாயம்-போடுறாங்க கரிசன வேசம்.

தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய நாட்டுக் குடியுரிமைக் கொடுக்க கூடாது என்று பா.ஜ.க. தமிழகத் துணைத் தலைவர் எச். ராஜா கூறினார்.

இலங்கையில் தமிழ் இனமே இருக்கக் கூடாது என்று செயல்பட்டு வரும் ராஜபக்ஷவுக்கு துணை போவதற்கு இந்த நிலைப்பாடு சாதகமாகிவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக பா.ஜ.க.வின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் கட்சித் தலைமையகமான கமலாலயத்தில் தலைவர் இல. கணேசன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த கூட்டத்தைத் தொடர்ந்து எச். ராஜா செய்தியாளர்களிடம் கூறியது:

இலங்கையின் பூர்வீக இனமான தமிழர்களை அந்த நாட்டிலேயே பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழ்நிலையை மத்திய, மாநில அரசுகள் அமைத்து தர வேண்டும்.

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கடந்த 10 மாதங்களாக தாக்கவில்லை என்று மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருப்பது முழு பூசணியை சோற்றில் மறைப்பது போல உள்ளது. சோனியா காந்திக்கு தமிழர்கள் மீதுள்ள வெறுப்பு காரணமாகவே, இலங்கைக்கு, மத்திய அரசு பல்வேறு உதவிகளைச் செய்துள்ளது என்றார் அவர்.

செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து அவர் மேலும் கூறியது:

இலங்கையில் மின் முள்வேலிக்குள் அடைபட்டிருக்கும் தமிழர்களின் நிலை குறித்து அறிய பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சி எம்.பி. குழுவை மத்திய அரசு இலங்கைக்கு அனுப்ப வேண்டும். இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை வெளியேற்ற வேண்டும். தமிழக மீனவர்கள் பாதுகாப்பு கருதி கச்சத்தீவை இந்தியா மீட்க வேண்டும் என்றார் எச். ராஜா.
(ஈழத்தமிழர்களின் மேல் அக்கறை இருப்பதுபோல் காட்டிக்கொண்ட இந்த மதவாதிகள். நிலவை காட்டி சோறுட்டும் தாய் போல் கரிசனம் காட்டுவதுபோல் வார்தை ஜாலம் காட்டி ஏமாற்றும் வித்தைதான் இலங்கையில் குடியமர்த்துவது என்பது நம் தமிழின மேல் யாருக்கும் உண்மை கரிசனம் கிடையாது என்பதே நிதர்சன உண்மை)
crown.

ஒரு கண்ணில் வெண்னை மறுகண்ணில் சுண்ணாம்பு!

டெல்லி: காஷ்மீருக்கு தனி தூதரை நியமித்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்புக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் இஸ்லாமிய நாடுகளின் அரசியல், சமுதாயம் மற்றும் பொருளாதாரம் குறித்த விவகாரங்களை கவனித்து வரும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு, சவுதி அரோபியாவை சேர்ந்த அப்துல்லா பின் அப்துர் ரஹ்மான் என்பவரை காஷ்மீருக்கான தனி தூதராக அறிவித்தது.

இஸ்லாமிய கூட்டமைப்பு காஷ்மீர் விவகாரத்தில் இது போன்ற முடிவு எடுப்பது இது தான் முதல் முறை. இதற்கு பாகிஸ்தானின் தூண்டுதலே இதற்குக் காரணமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியுறவு துறை அமைச்சகம் டெல்லியில் வெளியி்ட்டுள்ள செய்திக்குறிப்பில்,

இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு தலையிடுவது கண்டிக்கதக்கது. இதை இந்தியா கடுமையாக கண்டிக்கிறது. அந்த தூதரின் நியமனத்தை இந்தியா நிராகரிக்கிறது.

காஷ்மீர், இந்தியாவின் ஒரு பகுதி என்பதை அவர்கள் நினைத்து பார்க்க தவறிவிட்டனர். இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தி்ல் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு தலையிட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பான ஹுரியத் மாநாடு அமைப்பு தலைவர் மிர்வைஸ் உமர் பரூக் இதை வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு எடுத்துள்ள இந்த முடிவை ஆரோக்யமானதாக கருதுகிறோம். முஸ்லிம் நாடுகள் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றார்.
காஸ்மீர் ஏற்கனவே இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்!இதில் இஸ்லாமிய கூட்டமைப்பு சரியான முடிவை தாமதமாகவே எடுத்துள்ளது.அதே சமயம் மத்திய அரசு எடுக்கும் எத்தகைய நடவடிக்கையையும் பொருட்படுத்தாத குஜராதரசை மத்திய அரசு கண்டித்ததுண்டா? நடவடிக்கை எடுத்ததுண்டா?
crown