7/19/2008

ஆடும் குரங்குகள்

கூடாரம் விட்டு கூடாரம்,
தாவிடும் வானரம்,
கூவிடும் ராம்.ராம்!
தோழன் இங்கே எதிரியானான்,
நண்பனின் எதிரி நண்பன் ஆனான்!
மூன்றாம் அணியாய் சந்தர்ப அரசியல் காண லானான்.
இங்கே இல்லை அரசியல் தர்மம்.
ஒன்றும்மில்லை மர்மம்-
பணம் செய்யும் கர்மம்.
ஒருத்தன் காலை வாற ஒன்னு கூடும் அரசியல் பேரம்!
ஒத்துக்கொண்டு போகும் சோரம்.
வந்திடுமோ தேர்தல் நேரம்?-என்று ஆள்பவருக்கு சுரம்!
பொதுமக்கள் தலையில் அல்லவா அனைத்து பாரம்-
இது இந்திய சனநாயகத்தின் கோரம்.

----நன்றி:தமிழ்சங்கமி

No comments:

About Me