7/21/2008

குறுக்கீடுகள்

ஆரம்பபள்ளி காலதில்,
ஏதேனும் பேசினால்-
இருக்கையின் மேல் ஏற்றிடும் ஆசிரியை!
விளையாடும் பொழுதினில்-
விகடமாய் பேசினால்,
நண்பர்கள் சொன்ன அருவை வாயமூடு!
பணி இடத்தில், பணியினூடேபேசிய பொழுதினில்-
உடன் பணி புரிந்தவர்கள்- சொன்ன,
சும்மா தொன தொனதொனக்காத!
குடும்பத்தில்-முக்கிய முடிவு எடுக்கயில்,
மூத்தவங்க இருக்கும் போது-
முந்திரி கொட்டையாட்டம் பேசாதீங்க,
உங்க வாய தைக்கனும்!-
தடுத்துச் சொன்ன இல்லத்தரசி!
இத்தனை குறுக்கீடுகளினூடே-
நான் மனதில் பேசும்,
மவுனமொழியை-
யாராலும் தடுக்க முடியலெ,என்ற ஆனந்தம்
என்றும், எப்பொழுதும்.
Posted by:www.tamilsangami.blogspot.com

No comments:

About Me