5/10/2008

இன்றும் உயிருடன் இறந்தகாலம்

வண்ணமில்லா அன்னாள் புகைப்படம் சிரித்த முகத்துடன் எண்ணம் கவர,
நினைவு பின்னோக்கி கொக்கிப்போட!
வறுமை நெடியிலும் சின்ன வசந்தம் வீசிய தருணம்!
அடுத்த வேளை உணவு பகல் கணவு,
பசிதரும் மெல்லிய கிள்ளல்.
கூரை ஓட்டையின் வழி வந்து விழும் நிலாவின் எச்சில்!
காலம் இழுத்து வந்து வசதி தந்தாலும்-
ஒவ்வொரு நிமிடமும் வசதி காற்று குளிரிலும் மேனி வேர்கிறது.
சுற்றமே போலியாய் ,
நிகழ்காலம் வெப்பம் வீசும் காற்றாடியாய்!
வண்ண புகைப்படத்தில் கூட ஒப்பனை சிரிப்பை ஒட்ட வைக்கும் நிக(ழ)ல்(கோ)காலம்.

No comments:

About Me