12/10/2011

யாதும் தெருவே; யாவரும் கேளிர் !

அனைத்துத் தெருக்களும்
அதிரையின் கருக்கள்

கருத்துச் சூழ்கொண்ட
கண்ணியத்தின் உருக்கள்

அரவணைத்துச் சென்றால்
அத்துணைத் திசையும்
அதிரைக்கு இசையும்

இத்தனை நாட்களாய்
இங்குதான் இருந்தோம்
இன்றுபோல் என்றுமே
இணையாது மிகவிழந்தோம்

ஒற்றுமை யிருந்தும்
ஒழுகாது உழன்றோம்
ஒழுகும் குடிசையென
ஊரே நனைந்தோம்

இங்கிந்த இளைஞர்கள்
இல்லாது இருந்தால்
இன்னும் இழுத்திருக்கும்
இணைப்பெனும் இன்பம்

செயல்திட்ட மொன்று
செதுக்கும் இவ்வேளையில்
சிந்தையில் கொண்டிட
சீர்திருத்தங்கள் சில

தெருக்களைப் பெருக்கனும்
தெரு விளக்கெறியனும்
ஈக்களும் கொசுக்களும்
இல்லாமல் பண்ணனும்

நீர் நிலைகளெல்லாம்
தூர்வாரி நிறைக்கனும்
கழிவுநீர் கலக்காத
வாய்க்கல்கள் ஓடனும்

படிக்கவும் பயிலவும்
போதனை செய்யனும்
படிப்பின்றிப் போனாலோ
தொழில் பயிற்றுவிக்கனும்

மாற்றுக் கருத்தற்ற
மார்கம் போதிக்கனும்
முஹல்லாக்களுக்கிடையே
பாகுபாடு களையனும்

நீயும் நானும்
வழக்கொழிந்து போகனும்
நீங்களும் நாங்களும்
வாழ்க்கையென் றாகனும்

ஒற்றைச்சூரியன் உதிப்பதே
உலகுக்குக் கிழக்கு
ஊராரின் இவ்வமர்வால்
அதிரைக்குக் கிழக்கு

அதிரைக்காரர்களின்
அமீரகக் கூட்டமைப்பு
ஆழ வேர்விடனும்
வளைகுடா உலகமைப்பென
வளர்ந்து வியக்க வைக்கனும்

எல்லா முஹல்லாவையும்
இணைக்கும் நோக்கம்
நானிலம் முழுவதும்
நல்லா வளரனும்
அல்லாஹ் வளர்க்கனும்!
- சபீர்
Sabeer abuShahruk.
( இது அதிரை நிருபரில் வெளிவந்த தெரு ஒற்றுமைக்காக எழுதபட்ட கவிதை திருடி இங்கே போடப்பட்டுள்ளது. அதிரை நிருபருக்கு நன்றி!
-கிரவுன்).

1 comment:

More Entertainment said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in

About Me