8/07/2008

ஒன்றே குலம்!

மலப்புரம் : கேரளாவில் மசூதி ஒன்றில் சாதி, சமய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்களுக்கும் உதவிகள் வழங்கி வருவது, அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

கேரளாவில் மலப்புரம் பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்றில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக அப்பகுதியில் உள்ள சுமார் 12 ஆயிரம் மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சுமார் 10 கிலோ அரிசி வரை இலவசமாக வழங்கப்பட்டு வருவதாகவும் மகல் கமிட்டி அமைப்பின் தலைவர் தெரிவித்தார். கடந்த 2 தலைமுறைகளாக நடைபெற்றுவரும் இந்த இலவச அரிசி சேவைக்காக, வசதியான மக்களிடம் இருந்து அரிசி சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனை மாதந்தோறும் அந்த பகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். இதுதொடர்பாக அந்த பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கையில், மத வேற்றுமை பார்க்காமல், அனைத்து ஏழை மக்களுக்கும் ஒரே விதமாக அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது என்றும், இந்த சேவை தங்களை மகிழ்ச்சி அடையச் செய்வதாகவும் கூறுகின்றனர்.
Posted by tamilsangami

No comments:

About Me