5/26/2008

ஹைகூகள்

1.குளிரிலும் வேர்க்கிறது,குளிர் பான பாட்டில்.
2.இருவரியாய் நீயும் நானும் பொருள் பொதிந்த இன்ப ஹைகூ.
3.மன கூட்டில் ஆயிரம் ஆசைகள்,ஒவ்வொன்றாய் தலை காட்டும்,ஆமைபோல்.
4.இரவினில் கலந்து,பகலில் வெளிப்படும் தோழி- நிழல்.
5.அவள் மறதி போன்றவள், என்றும் மறக்க முடியாததால்.
6.வளைந்து ஓடிடும் ஆறு,இளைபாறினால் அது குட்டை.
7.ரகசியத்தை,பகீரங்க படுதியது-தொலைந்து போன காதல் கடிதம்.
8.அழியாத கிருக்கல் என் கைகளிலே-ரேகை.
9.ஆண்டுகளாய் கூடவே இருந்து பின் காட்டி கொடுத்தாயெ துரோகி-நாள் குறிப்பேடு.
10.எனக்கு நானே வலை விரித்தேன் -இரவில் கொசுத்தொல்லை

No comments:

About Me