2/08/2011

அன்பரே!

உங்கள் கவிதையை நாளெல்லாம்
கேட்டு கொண்டே இருக்கலாம் என்றாய்.
ஆனந்தம் அடைந்தேன்.
மேலும்,மேலும் கவிதை புனைந்தேன் ரசித்தாய்.
கவிதையை வைத்து காலம் தள்ளமுடியாதுன்னு
விட்டு சென்றுவிட்டாய்.
பின் நான் எழுதும் கவிதைகள் யாவும்
பத்திரிக்கை ,இணையத்தில்,
திரைப்பாடலாக விற்பனையில்
வீருனடை போட பணக்குவியல்,
புகழ் மழை என் மேல் ஆனாலும்,
அந்த கவிதைகளில் ஒரு வெற்றிடம் பார்கிறேன்.
ஊர் மெச்சினாலும் அந்த கவிதையில் உயிர் இருப்பதாக
எனக்கு படவில்லை.
நீ வாசிக்காத கவிதையும்,
நேசிக்காத படாத நானும்
உயிர் தாங்கியப்பிணம்.

5 comments:

அதிரைBBC said...

கருவைத் தொலைத்த கவி
கல்யாணமாகியும் வாழாவெட்டியே !

இது யாரும் சொல்லவில்லை - நான் சொன்னது !

sabeer.abushahruk said...

அப்ஜெக்க்ஷன்!

கவிதையை ரசிக்கத்தெரியாத
கருவுடன் காலம்தள்ளவேண்டிய
கண்டத்திலிருந்து தப்பித்தார்
கவி!

ZAKIR HUSSAIN said...
This comment has been removed by the author.
ZAKIR HUSSAIN said...

எங்கேயோ ஒரு ஏக்கம் தெரியுதே!!! ஹ்ம்....... மனித மனம் தேடலில்
ஒய்ந்து போவதுதானா?

crown said...

ZAKIR HUSSAIN said...
எங்கேயோ ஒரு ஏக்கம் தெரியுதே!!! ஹ்ம்....... மனித மனம் தேடலில்
ஒய்ந்து போவதுதானா?
----------------------------------
தேடலின் நிழலில் தங்கி காலம் கழிப்பது கூட.

About Me