1/25/2011

இல்லாத சுதந்திரம்.

என் பிள்ளையின் பள்ளியில் குடியரசு தின விழா
கொடியேற்றத்திற்கு பெற்றோர் பங்கேற்க அழைப்பு!
கொடியேற்றி மிட்டாய் வழங்கியபின்
வீடு திரும்பும் வழியில் சேரியை கடக்கையில்,
நிர்வாணமாய் ஆடையின்றி திரியும் சின்னக்குழந்தைகள்.
இதை கண்ட என் மனம் சிந்தித்து இப்படி
கொடியை இறக்கி அந்த துணியை ஆடையாய்
ஒரு சிறுவனுக்கேனும் தந்தால்????
இந்தியா மானம் காப்பாற்றப்படுமே!!!
இப்படி நாட்டில் உள்ள கொடிகளை எல்லாம்
கழற்ற என் மனம் விரும்பினாலும்...
எனக்குச் சுதந்திரம் இல்லை
நினைத்துப்பார்ததில் மிட்டாய் கசந்ததே!
(ஒரு காள் வெள்ளையன் ஆள்வது தொடர்ந்திருந்தால் சேரிக்கெல்லாம் ஆடை கிடைத்திருக்குமோ?)
-----(crown)தபால்காரன்.

4 comments:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சுதந்திரமா(த்தான்) எழுதியிருக்கே !

கொடியை ஆடையாக்கும் நாட்டிலிருந்து கொண்டு.. கொடியையை ஆடையாக்க நினைத்திருக்கிறாய் !

கொடியவர்களின் கையில் கொடியை பிடுங்கித்தான் பார்ப்போமா !?

Yasir said...

கொடியை வைத்து...நாட்டில் நடக்கும் கொடுமையான விசயத்தை ..அருமையான சிந்தனையுடன் எழுதி இருக்கிறீர்கள்

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

தபால்கார தம்பி கவிதைக்கு பலரும் கருத்து சொல்லிவிட்டார்கள் .எனக்கு மட்டும் கவிதைக்கு கண்ணும் கருத்துமா கருத்து சொல்ல தெரியவில்லை,

இந்த தாபல்காரன் என்ற பேரை முடிந்தால் மாற்றிவிடுங்கள்
இப்போதெல்லாம் தபால் காரன் மூலம் கடிதங்கள் வருவதில்லை.

sabeer.abushahruk said...

இந்த உம் அக்கறை உமது நல்ல மனதைக் காட்டுகிறதேயன்றி இந்த பண வெறி பிடித்து கொடியோடு கொள்கைகளையும் காற்றில் பறக்கவிட்டுவிட்ட அரசியல்வாதிகளிடம் மாற்றம் கொண்டு வருமா?

About Me