1/25/2011

அவசியமாய் ஒரு "கொலை"

குற்றத்தில் புழுவாய் நெளிந்தேன்,
புழுவை தூண்டிலில் மாட்டியப்பின்.
மீன் தூண்டிலில் மாட்டித்துடித்ததும் நானும் துடித்தேன்.
பின் மீன் குழம்பு நியாபகம் வர
மறந்தேன் மீனுக்குத்துடிப்பதை.
புழுவை தின்ற மீன் இரங்கித் துடிக்கவில்லை!
மீன் திங்க நான் இரங்கித் துடிப்பதா?
வயிற்றுப்பாடமும்,
நாவின் சுவைத்தவிப்பும் மறக்கச் செய்தது
மீனுக்குகாய் வருந்தித் துடிப்பதை
இது தேவையின் கொலை.
சிந்தைச்சொல்லியது,
குழம்பில் மீன் துள்ளியது.
------(crown)தபால்காரன்.

3 comments:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அது என்னா மீண் தபால் காரரே !?

இங்கேயும் வருவோம் அதே நேரத்தில் நீர் அங்கு வந்தாலும் தாங்கித்தான் பிடிப்போம் உன்னையும் !

sabeer.abushahruk said...

"வயிற்றுப் பாடம்" என்று தலைப்பிட்டு வாசித்துப் பார்த்தேன், கவிதையில் இன்னும் சற்று இலக்கிய வாசம் கூடிற்று.

புழுவின் கொலைக்கு துடிக்காத மீனின் கொலைக்கு நான் துடிக்க வேன்டியதில்லை என்று சாப்பிட்டதும் சமாதானமாயிற்றா?

"கொண்டால் பாவம் தின்றால் போச்சு" நு ஒரு கவிஞன் எழுதியது நினைவுக்கு வருகிறது.

வித்தியாசமான சிந்தனை கிரவுன்.

sabeer.abushahruk said...

கொன்றால் என திருத்தி வாசிக்கவும்

About Me