5/24/2008

பத்திரிக்கை (அ)தர்மம்)

பத்தி,பத்தியாய் நடப்புகளை திரித்து செய்தி யென்று,
அதர்மம்,வண்மம்,காழ்புணர்சி,
வேண்டாதவரை சாடல்,
வேண்டியவரின் கூடல்!
கற்பனை சரக்கை,
விற்பனைகுதிரையில் ஏற்றி,
உலகமெலாம் வலம் வர செய்(தி)து,
கடிவாளம் கையில் பிடித்து
பிழை செய்யும் இக்காலப்பத்திரிக்கை.
வர்தக காற்றில் காலத்தே
தூற்றி கொள்ளும் இந்த நரிதந்திரகூட்டத்திற்கு
விசிறியாய் வாசகனாய்,
வேர்க்க,வேர்க்க செய்தீ படித்து பின்-
அதன் அதனை நம்பிடும் வேடிக்கை கூட்டம்!
வாடிகையாய் இருக்க கானும் பொழுதினில்.....
சுயபுத்தி நானமுற,சுயமரியாதை சுடுகிறதே.
எனக்குள்ளே எழுந்த சினம் தீப்பிழம்பாய்....
என்று எம்மக்களுக்கும் எழும்?-
அன்றே தீய பல பத்திரிக்கை தீயிட்டு கொழுத்தபடும்.
பின் வரும் காலங்களில்
நல்ல பல பத்திரிக்கை தோன்றி-
திசையெங்கும் எட்டும் - நல் செய்தி.

No comments:

About Me