என் பிள்ளையின் பள்ளியில் குடியரசு தின விழா
கொடியேற்றத்திற்கு பெற்றோர் பங்கேற்க அழைப்பு!
கொடியேற்றி மிட்டாய் வழங்கியபின்
வீடு திரும்பும் வழியில் சேரியை கடக்கையில்,
நிர்வாணமாய் ஆடையின்றி திரியும் சின்னக்குழந்தைகள்.
இதை கண்ட என் மனம் சிந்தித்து இப்படி
கொடியை இறக்கி அந்த துணியை ஆடையாய்
ஒரு சிறுவனுக்கேனும் தந்தால்????
இந்தியா மானம் காப்பாற்றப்படுமே!!!
இப்படி நாட்டில் உள்ள கொடிகளை எல்லாம்
கழற்ற என் மனம் விரும்பினாலும்...
எனக்குச் சுதந்திரம் இல்லை
நினைத்துப்பார்ததில் மிட்டாய் கசந்ததே!
(ஒரு காள் வெள்ளையன் ஆள்வது தொடர்ந்திருந்தால் சேரிக்கெல்லாம் ஆடை கிடைத்திருக்குமோ?)
-----(crown)தபால்காரன்.
