அரிச்சுவடி
அநியாயம் எதிர்ப்போம்!அறியாமையை போக்குவோம்
7/28/2013
1/06/2012
புன்னகை!
புன்னகை
முகத்துக்கு ஒளிவிளக்கு!
புன்னகை
சமாதானப் புறா!
புன்னகை
மெளனத்தின் தவம்!
புன்னகை
சலன மனதிற்கு ஒரு கடிவாளம்!
புன்னகை
பறிகாசத்தை மங்கச் செய்யும் பிரகாசம்!
புன்னகை
எதிரியையும் நம் பக்கம் திருப்பும் காந்தம்!
புன்னகை
சினத்தைச் சிறைப்படுத்தும் ஆயுதம்.
புன்னகை
அமைதியின் நிழல்!
புன்னகை
மணம் வீசும் பூந்தோட்டம்!
புன்னகை
மனதை பறிக்கும் மலர்!
புன்னகை
கருணையின் கண்ணாடி!
உதட்டு ஒப்பனை பூச்சைவிட
புன்னகைசிந்தும் மந்தகாசம்
அட்டகாசமான மந்திரம்!
அது செய்யும் தந்திரம்
திறம்!
வரம்!
வாழ்க்கைக்கு உரம்!
- CROWN
---------------------
நன்றி: அதிரை நிருபர்.

12/10/2011
யாதும் தெருவே; யாவரும் கேளிர் !
அனைத்துத் தெருக்களும்
அதிரையின் கருக்கள்
கருத்துச் சூழ்கொண்ட
கண்ணியத்தின் உருக்கள்
அரவணைத்துச் சென்றால்
அத்துணைத் திசையும்
அதிரைக்கு இசையும்
இத்தனை நாட்களாய்
இங்குதான் இருந்தோம்
இன்றுபோல் என்றுமே
இணையாது மிகவிழந்தோம்
ஒற்றுமை யிருந்தும்
ஒழுகாது உழன்றோம்
ஒழுகும் குடிசையென
ஊரே நனைந்தோம்
இங்கிந்த இளைஞர்கள்
இல்லாது இருந்தால்
இன்னும் இழுத்திருக்கும்
இணைப்பெனும் இன்பம்
செயல்திட்ட மொன்று
செதுக்கும் இவ்வேளையில்
சிந்தையில் கொண்டிட
சீர்திருத்தங்கள் சில
தெருக்களைப் பெருக்கனும்
தெரு விளக்கெறியனும்
ஈக்களும் கொசுக்களும்
இல்லாமல் பண்ணனும்
நீர் நிலைகளெல்லாம்
தூர்வாரி நிறைக்கனும்
கழிவுநீர் கலக்காத
வாய்க்கல்கள் ஓடனும்
படிக்கவும் பயிலவும்
போதனை செய்யனும்
படிப்பின்றிப் போனாலோ
தொழில் பயிற்றுவிக்கனும்
மாற்றுக் கருத்தற்ற
மார்கம் போதிக்கனும்
முஹல்லாக்களுக்கிடையே
பாகுபாடு களையனும்
நீயும் நானும்
வழக்கொழிந்து போகனும்
நீங்களும் நாங்களும்
வாழ்க்கையென் றாகனும்
ஒற்றைச்சூரியன் உதிப்பதே
உலகுக்குக் கிழக்கு
ஊராரின் இவ்வமர்வால்
அதிரைக்குக் கிழக்கு
அதிரைக்காரர்களின்
அமீரகக் கூட்டமைப்பு
ஆழ வேர்விடனும்
வளைகுடா உலகமைப்பென
வளர்ந்து வியக்க வைக்கனும்
எல்லா முஹல்லாவையும்
இணைக்கும் நோக்கம்
நானிலம் முழுவதும்
நல்லா வளரனும்
அல்லாஹ் வளர்க்கனும்!
- சபீர்
Sabeer abuShahruk.
( இது அதிரை நிருபரில் வெளிவந்த தெரு ஒற்றுமைக்காக எழுதபட்ட கவிதை திருடி இங்கே போடப்பட்டுள்ளது. அதிரை நிருபருக்கு நன்றி!
-கிரவுன்).

4/07/2011
விடாதே பிடி
தலைநோன்பு பிடித்தவொரு
கலையாத நினைவு ...
பின்னிரவில் விழித்து
பிடித்துவிடத் தயாராகி
உண்டு காத்திருந்தும்
உறங்கும்வரை வருமென்ற
உருவநோன்பு வரவேயில்லை!
மண்பானைத் தண்ணீரும்
முதல்நாள் தலைநோன்பும்
ஒன்றுக்கொன்று ஒவ்வா
ஒத்துவராத் தேட்டங்கள்!
வீம்பு பிடித்தேனும்
நோன்பு பிடித்தோம்
அன்னை தடுத்தார்
சொன்னதைக் கேளோம்!
சஹரில் விழித்து பின்
லுஹரில்தான் விழித்தோம்
இடைப்பட்ட நேரம்வரை
பசிதாகம் பொறுத்தோம்!
உச்சி வெயில்வேளை
ஊருணியில் குளித்தோம்
குளித்த தண்ணீரைக்
குடல்முட்டக் குடித்தோம்
அச்சுவெல்லப் பாச்சோறும்
பச்சரிசிப் பிடிமாவும்
இளநீரின் வழுக்கையும்
இறால் பதித்த வாடாவும்
நோன்புக் கஞ்சி மல்லாவும்
நன்னாரி சர்பத்தும்
முன்னாலே இருக்கும்
தலைநோன்பு திறக்கவென!
படைத்தவன் பெரியவன்
எனும் பாங்கின்
அழைப்போசை கேட்குமுன்
அமுதமாய்க் காதில்விழும்
அடிக்கும் நகராவோசை!
மஃரிபுக்குப் பிறகு அரை
மயக்கத்திலே கிடக்கையில்
மண்டைக்குள்ளே கேள்வி
நோன்பு
பிடித்தேனா விட்டேனா?!
- சபீர்
கலையாத நினைவு ...
பின்னிரவில் விழித்து
பிடித்துவிடத் தயாராகி
உண்டு காத்திருந்தும்
உறங்கும்வரை வருமென்ற
உருவநோன்பு வரவேயில்லை!
மண்பானைத் தண்ணீரும்
முதல்நாள் தலைநோன்பும்
ஒன்றுக்கொன்று ஒவ்வா
ஒத்துவராத் தேட்டங்கள்!
வீம்பு பிடித்தேனும்
நோன்பு பிடித்தோம்
அன்னை தடுத்தார்
சொன்னதைக் கேளோம்!
சஹரில் விழித்து பின்
லுஹரில்தான் விழித்தோம்
இடைப்பட்ட நேரம்வரை
பசிதாகம் பொறுத்தோம்!
உச்சி வெயில்வேளை
ஊருணியில் குளித்தோம்
குளித்த தண்ணீரைக்
குடல்முட்டக் குடித்தோம்
அச்சுவெல்லப் பாச்சோறும்
பச்சரிசிப் பிடிமாவும்
இளநீரின் வழுக்கையும்
இறால் பதித்த வாடாவும்
நோன்புக் கஞ்சி மல்லாவும்
நன்னாரி சர்பத்தும்
முன்னாலே இருக்கும்
தலைநோன்பு திறக்கவென!
படைத்தவன் பெரியவன்
எனும் பாங்கின்
அழைப்போசை கேட்குமுன்
அமுதமாய்க் காதில்விழும்
அடிக்கும் நகராவோசை!
மஃரிபுக்குப் பிறகு அரை
மயக்கத்திலே கிடக்கையில்
மண்டைக்குள்ளே கேள்வி
நோன்பு
பிடித்தேனா விட்டேனா?!
- சபீர்
3/25/2011
இவர்கள்.
"நம் யாவராலும் நன்கு அறியப்பட்ட கவிக்கு விளக்கவுரை கொடுத்திடும் "வார்த்தை விளையாட்டின் எழில்" பதிந்திருக்கும் கிரவ்னுரை சிறப்புப் பதிவு :"
அஸ்ஸலாமு அலைக்கும். எல்லாபுகழும் அல்லாஹுக்கு மட்டுமே!அல்லாஹ் நம் பாவங்களை மன்னிப்பானாக..இவர்களும் அதிரை நிருபர்களே! ஒவ்வொருவரின் குணாதிசயங்களை அவர்களின் பங்களிப்பை மட்டுமே வைத்துக்கொண்டு கிட்டதட்ட நெருங்கி பழகியதைப் போல் மிக சரியான அளவுகோலில் அளந்த சகோ.சபீர் அவர்களை கண்டு வியக்கிறேன். ஏதோ நம் நிழல் போல் வந்து நம்மை அறிந்து , நம் குணங்கள் தெரிந்து பின் கருத்திட்டது போல் ஒவ்வொருவரைப்பற்றியும் உள்ளங்கையில் நெல்லி கனி போல் சொன்னவிதம் அல்ஹம்துலில்லாஹ் அருமையிலும் அருமை.சிலரிடம் அவர்கள் பல காலம் கூட இருந்து பழகி எழுதி இருக்கிறார்கள். ஆனால் இங்கு குறிப்பிட்ட நபர்களை பற்றி செவிவழி கேட்டதும்,தீர ஆராய்ந்தும்,
அவர்களின் படைப்பான எழுத்தின் தன்மையை வைத்து கனித்ததும் வியத்தகு சாதனை.அல்ஹம்துலில்லாஹ்.
இவர்கள்
அதிரை அஹ்மது காக்கா:
தமிழுக்கு தாதா...
இங்கிலீஸுக்கு துரை!
தமிழில்...
தன்னிகரற்ற
தனிக்காட்டு ராஜா!
இலக்கணம் உடுத்திய
இதயத்தில் இளைஞர்!
மரபுடைத்தோ
மரபை உடைத்தோ
இவர்கள்மேல் என்றும்
எமக்குப் பிரியம்!
*********************************************************************************
மிக நேர்த்தியான சரியான கணிப்பும்,விளக்கமும்.இந்த அதிரை ஈன்ற "கோ"மகனை பற்றி இன்னும் சொல்லலாம். ஆனாலும் சபைக்கு போதுமான அளவில் பறிமாற பட்ட செவிக்குணவு இது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இதம்.பலவிதம்.
-------------------------------------------------------------------------------------
ஆசான் ஜமீல் காக்கா:
புதையல் தேடி
ஜமீனைத் தோண்டு - அறிவு
பொக்கிஷம் வேண்டி
ஜமீல் காக்காவைத் தூண்டு!
கற்பித்தலும் கற்றலும்
காக்காவின் கண்கள்!
தமிழ்...
தன்னை
அலங்கரித்துக் கொள்கிறது-
அதி-அழகு ஆசானின்
ஆணைக்குட்படும்போதெல்லாம்!
********************************************************************************
இவர்களைப்பற்றி பார்த்து பழகியதை சொன்னதால் அப்படியே சொல்லிவிட்டார்கள். மேலும் நான் பார்த்தவரை இவரின் வார்தையை நான் வழி மொழிவதுதான் சாலச்சிறந்தது.

சகோ. ஷாஃபி:
வலைப்பூவின்
தலைப்புக்கு
முழக்கம் தந்தவர்.
தர்க்கங்களின்போது
தகிக்கும் தமிழ்...
வாழ்வியல் வசனங்களில்
வருடும்...
இவர்கள்
வார்த்தெடுக்கும் மொழி!

இவர் வார்தெடுக்கும் மொழியும், ஆதாரங்களை தோன்டி எடுக்கும் லாவகமும். தொல் பொருள் ஆராட்சியாளார் தோற்பார் இவரிடம். உண்மை வரும் வரை எந்த ராசா ஆனாலும் விடாப்பிடியாய் வழிக்கு கொண்டுவரும் விடாகண்டன் அன்பு சகோதரன். சி.பி.ஐ அலுவலர்கள் இவரிடம் பணி நிமித்தம் பயிற்சி எடுத்தால் ஸ்பெக்ட்ரம் எல்லாம் வெளியில் வந்துவிடும். இவரிடம் அந்த கேசு போய் இருந்தால் ராசாவுக்கும்,அவன் ராசா(கருணாநிதி)க்கும் களிதான் போங்க.

என் ஜாகிர்:
இவன்
படைப்பை
படிக்கையில்
புகைப்பட வாயிலும்
புன்னகை பூக்கும்....
கசப்போ கரிப்போ
இவன்
கையெழுத்தில் இனிக்கும்!
தீய சக்திகள்
தீண்டாமல் வாழ
இவன் சிந்தனயை
தினமும்
மூன்று வேளை
உணவுக்குப் பின்
உட்கொள்ளவும்!

கவியோடு சேர்ந்த நால்வர் படையில் ஒரு சேனை.கவி நண்பனுக்கும் சிலனேரம் இடுவார் ஆனை! நம் கவியால் படிக்கப்பட்ட ,கவியையும் நன்கு படித்த நகமும் சதையும்.இவரின் குணம் கான இவரின் எழுத்தே கண்ணாடி. இவரின் முன்னாடி நிற்றாலே நோய் ஓடிப்போய்விடும் என்பது திண்ணம் சரிதானே கவிஞரே உங்கள் நண்பரைப்பற்றிய என் எண்ணம்!!!!

சகோ. ஹாலித்:
பதிவர்களை
முன்னேற்றப் பாதையில்
உந்தும் சக்தியில்
என்னைப்போல் ஒருவரான
இவரைப்போல் ஒருவராக
எல்லோரும் மாறனும்!
கச்சித மொழியாடலின்
குத்தகைக்காரர்!
******************************************************************************
மிகச்சரியான கணிப்பு. முகஸ்துதியை விரும்பாதவர். விருந்து வைத்து கவனித்தாலும் செய்த தவரை சுட்டிகாட்டும் நேர்மையிம் முகம் கொண்டவர்.சிக்கனமானவர் நேரத்தை கடை பிடிப்பதில். கெட்டிக்காரர். அநீதிக்கு அக்னி முகம் காட்டுபவர். நல்ல எழுத்தாளர்.

அலாவுதீன்:
அல்லாஹ்வின் மார்க்கத்தை
அழகாய் எத்தி வைப்பான்,
கடனின்றி வாழ
கச்சித புத்தி சொல்வான்!
நல்லொழுக்க வாழ்க்கையை
தமக்குள் சாதித்து
தரனிக்கும் போதிப்பவன்!
************************************************************************************
நல்ல வாத்தியார். நல்லொழுக்கம் போதிக்கும் மார்க்க சிந்தனையாளர். வாழ்வில் சந்திக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுபவர்.

ஹமீது!
வழக்கு மொழிமூலம் அதிக
வாக்குகள் பெற்றவர்,
விஞ்ஞான கட்டுரைகூட
விளையாட்டாய் விளக்குவார்!
நாக்கிலே நக்கல் - நல்
வாக்கிலே நையாண்டி
குட்டிப் பின்னூட்டங்களில்
சுட்டி வள்ளுவன்!
**********************************************************************************
சமூக அக்கறையாளார்.. நற்சிந்தைக்கு சொந்தகாரர்.விகடகவி.சொல்லில் நகைச்சுவை குழைத்துத்தருபவர். விஞ்ஞானத்தில் மேல் காதல் கொண்டவர்.மெஞ்ஞானம் இஸ்லாமே எல்லாத்திற்கும் என்பதை அழுத்த பதிபவர். நல்ல நண்பராய் இருப்பவர்.

அபு இபுறாஹீம்:
கணினிக் காட்டுக்குள்
கம்பீர சிங்கம் நீர்....
கூட்டுக் குழுமத்தின்
கொத்தான ஆணி வேர்...
வலைப்பூ உலகத்தில்
வனப்பான பூங்கா நீர்!
சொல்லாடல் சாம்ராஜ்யத்தின்
சக்கரவர்த்தி!
***********************************************************************************
சரியா நாடி பிடித்திருக்கிறீர்கள். இவரை நாடி வருபவருக்கு நல்லதேயே செய்யக்கூடியவர்.. குணம் நாடி, எல்லாரும் வருவர் இவரிடம் ஓடி! என் காக்காவின் நண்பன்,எனக்கும் நண்பன், என் தம்பிகளுக்கும் நண்பன்(fun,fun,fun).எப்படி இவரால் மட்டுமே அப்படி எல்லாருக்கும் நண்பனாய், சகோதரனாய் இருக்க முடிகிறது?. யாரிடமும் சிண்டு முடியாத சிந்தனை வாதி.இவரை பாரட்டுவது என்னை நானே முதுகில் தட்டி கொடுப்பது போல்.உதவிக்கு நாம் இவரிடம் சென்று கேட்க வேண்டாம் . நமக்கு உதவி தேவை என்பதை இவரே அறிந்து கொள்வார் அந்த உதவியை நம் தேவை கருதி முழுதும் அற்பனிப்போடு செய்வார். வால் முளைக்காத வால் இவர். என்றும் திரிந்து விடாத பால் இவர். இவரின் மேல் கொண்ட அன்பால் சொல்கிறேன் என்று மட்டும் நினைக்க வேண்டாம். இவரின் பண்பால் அப்படி சொன்னேன். இவரின் உள்ளம் பாலை போல் வெண்மை அதில் நிறைந்திருப்பதெல்லாம் நன்மை.
------------------------------------------------------------------------------------
கிரவுன் தஸ்தகீர்:
தமிழொரு மொழியெனில்
தாமதில் எழில்!
சொல் விளையாட்டில்
சங்ககாலச் சித்தர்!
கவிதைப் பிரியர் - உமை
கவி யாரும் பிரியார்!
இவர்
அழைத்தால் மட்டும்
கைகட்டி வாய் பொத்தி
எப்படி...
வரிசையில் நிற்கின்றன
வார்த்தைகள்?!

நன்றி! என்னை பற்றிய செய்தி மிகையா? அன்பின் வெளிப்படா? ஆகினும் மீண்டும் நன்றி.என்னை முழுமையாய் அறிய மேலே உள்ளவரை கேட்டால் சொல்வார்(அபு இபுறாகிம் காக்கா).

எம் எஸ் எம் நெய்னா முஹம்மது:
மழை பெய்தால்
மண்மணக்கும்...
இவர்
எழுத்திலெல்லாம்
மனம் மயங்கும்!
நாம்
அறிந்த அதிரையைவிட
இவர்
அறிவித்த அதிரையே...
அழகோ அழகு!

இனியவர். நகைச்சுவைமன்னன், சமூதாய அக்கரையாளன்,சமாதான புறா.மண்ணை வர்னிப்பதில் மற்றொரு வைர முத்து,இவரின் ஒவ்வொரு வார்தையும் முத்தில் பதிந்த வைரம்.

சகோதரி அன்புடன் மலிக்கா:
தமிழ் மொழி தறித்து
தமிழ்நாட்டில் போரிட்டு
யுனிகோட் வள்ளல்
உமர்தம்பி காக்காவுக்கு
அங்கீகாரம் வென்றெடுத்த
எங்கூரு வேங்கை!
கவிதையை சுவாசித்து
கவிதையை உண்டு
கவிதையாய் வாழ்பவர்!
*************************************************************************************
மல்லிகைச்சரமாய் வார்தை கோர்பவர். இனிய சகோதரி.மார்கம் வகுத்த கோட்டை தாண்டாதவர், கற்பனை கோட்டையை தாண்டியவர். நடமாடும் கவிக்குயில்.சாதனை பெண்.சளிக்காமல் கவிதை தருபவர்.மற்ற கலைகளிலும் தேர்ந்தவர். நம்மை சார்ந்தவர்.
---------------------------------------------------------------------------------
யாசிர்:
யாசிரின் பின்னூட்டம்
யாசிக்கவும் தயார்!
ஆக்கத்தைக் குறைத்து
ஊக்கத்தை பதிபவர்!
இவரின்
பின்னூட்டங்கள் தொகு...
பி ஹெச் டி பெறு!
*****************************************************************************
மிகச்சரியாக சொல்லியுள்ளீர். கருவில் குழந்தை தாங்கி பின் பெற்றெடுப்பவள் தாயார்.இவரின் கருத்துக்கு பத்து மாதம் கூட காத்திருக்க தயார். வாழைப்பழத்தில் ஊசி ஏத்து"பவர்.ஊசி பட்டாசும் இவரே! அணுகுண்டும் இவரே. எளிய பண்பாளர். இவர் கருத்து எழுதுவார் என்றே கவனித்து எழுத வேண்டியுள்ளது.பள்ளிக்கூடத்துக்கு இன்பெக்ஸன் வரும் அதிகாரி போல இவரின் வரவு.

அப்துர்ரஹ்மான்:
கற்பனை செய்வதில்
விற்பன்னர் இவர்!
பூவோ பொண்ணோ
நதியோ நாற்றோ
இவர் கவிதைக்கு
உட்பட்டால்...
காலமெல்லாம் செழிப்பே!

என் பால்ய நண்பன்.என் முதல் வாசகன்,படிப்பாளி.பள்ளியில் படித்ததைவிட அனுபவ பாடம் அதிகம்.அறிவாளி.கற்று கொள்வதில் தாகம்மிக்கவன். கணவு கான்பவன்.கற்பனையின் உச்சம் காண்பவன்.ஒரு மரத்தை பற்றி எழுதும் முன் அந்த மரத்தின் மரபை படிப்பவன் பின் படைப்பவன். ஆணிவேரையும், சல்லிவேரையும் ஆழ்ந்து ஆராய்ந்து எழுதுபவன். நல்லவிமர்சகன்.இன்னும் கவனம் செலுத்தினால் நம் ஊரின் நாளைய மற்றொரு அதிரை கவி.

ஹிதாயத்துல்லாஹ்:
உயிரூட்டப்பெற்ற
அறிவுக்களஞ்சியம் - இவர்
உரமேற்றப்பெற்ற
குறிஞ்சி பூதம்!
இவருக்கு
சின்ன கிரீடம் ஒன்று
செய்தணிவித்து...
குட்டி கிரவுன்
என்றே
கூப்பிட ஆசை!

என் இளவல்.உடன் பிறந்தவர்களில் என் அன்பை அதிகம் பெற்றவன். எத்தனை வயதானாலும் என் செல்லம்.அதிகாரம் மிக்கவன்,ரோசக்காரன்,பல நேரம் எனக்கு அண்ணன், ஆலோசனை சொல்லும் மந்திரி. நேர்மைக்கு எதிராக யார்வந்தாலும் விடான்.இவன் வளரும் வயதில் இவன் வயதை ஒத்தவர்கள் வண்ண கோழி குஞ்சு வளர்த்து வந்தனர்.இவனோ சமுதாயதின் மேலும், ஊடகத்துறைமேலும் எண்ணங்களை வளர்த்தான். பள்ளி படிப்பு படிக்கும் போதே பத்திரிக்கைத்துறையில் உயர்பதவியில் இருந்தவன். இவன் தேடிய பயணம் நான் அறிந்தவை வேறு. புரட்சியாளனால் வார்க்கபட்டவன்(காலம் கருதி சொல்லவில்லை-அபு இபுறாகிம் காக்கா போன்றோர் அறிவர்) சமுதாயத்தின் மேல் நிசமாய் கணவு கான்பவன்.உலக விசயம் விரல் நுனியில் வைத்திருக்கும் அன்பு தம்பி எனக்கும் பல விசயத்தில் ஆசான்.(அல்லாஹ் போதுமானவன். எல்லாப்புகழும் அல்லாஹுக்கே).
-----------------------------------------------------------------------------------
அதிரை முஜீப்:
இவர் ஒரு டாட் காம்
ஆனால் நாட் காம் (calm)
குறை சொல்லமுடியாத
கோபத்தில் கோமான்!
சமூக அக்கறையில்
சுயநலமற்ற சீமான்!

சமுதாயத்துக்கு எதிரான சமரில்(போர்களம்) இவர் அக்க போரல்ல ஆக்கபோர்! அமர்(வீரன்).இவரை பார்போரையும் ஈர்பாராய் இருப்பவர்.வேள்வி தீயை எரியவிட்டுகொன்டே அந்த தழல் தாழ்ந்துவிடாமல் கொழுந்துவிட்டு எரியச்செய்து சமுதாயத்துக்கு வெளிச்சம் தேடுபவர். கல்வி கண்ணை என்றும் மணக்கண்னாய் சுமந்து நல்ல நல்ல மாணாக்கன் வரவேண்டும் என்று பாடுபடுபவர். நாளை சமுதாயத்தூனனை நிறுவத்துடிக்கும் சிற்பி! மற்றவருக்கு பாடம் கற்பி,கற்பி என்று கதருபவர். சமுதாய ஊழியன் இவரின் அன்புக்கும், எண்ணத்துக்கும் இப்போதைக்கு அன்பு முத்தங்கள்.

ஷரபுதீன் நூஹு:
படித்த சமுதாயம்
இவருக்குப்
பிடித்த கனவாகும்...
கல்வி விழிப்புணர்வு
இவர்
வகுத்த வழியாகும்!

படிக்காமல் இருக்கலாம் என்ற எண்ணம் இருக்கலாகாது என்று எண்ணும் மற்றோரு அபுல் கலாம்.கணவு கான்பவர் கணவிலும் நம் சமுதாயம் படித்ததாய் கான கணவு கான்பவர்.இவரின் ஆதாங்கம் சமுதாயத்துக்கு ஆதாயம்.

அதிரை மீரா:
மீரா வுக்கொரு
தீராக் கனவு
யாரா வது ஒரு
பேரா வது
ஊரா ளும்படி பயிலவேண்டும் என!
படித்தது பொறியியல்
படிப்பு மட்டுமே தம் பொறியில்!

மீரா! சமுதாய எண்ணம் மீறாத வீரா!உனக்குள்(உங்களுக்குள்) உள்ளபொறி! சமுதாயம் முன்னேற வேண்டும் என்கிற குறி! அது நன்மை பயக்கும் வெறி!வாழ்த்துக்கள்.

அப்துல் மாலிக்:
சமூக
அக்கறைத் தூரிகையால்
அழகு தமிழ் தொட்டு
இவர்
தீட்டியதெல்லாம்
சீர்திருத்த சிந்தனைகள்.

சமுதாயத்தின் நன்மைக்கு அறக்கூவலிடுவதில் தலைமை ஏற்பவன். இணையத்தின் வழியாக கருத்தாகவும்,மடலாகவும் சமுதாயதிற்கு தேவையான வழிமுறைகளை எல்லாருக்கும் கொண்டு சேர்ப்பவன்.சக சகோதரனின் முன்னேற்றத்தை தன் முன்னேற்றமாய் பார்பவன்.

அபு ஆதில்:
இவர்
ஆக்கமெல்லாம் நல்
நோக்கம் நிரம்பிய நீர்
தேக்கம்போல!

மனதில் உள்ளதை சொல்லிவிடுகிறேன்.. இந்த சகோதரரை பற்றி அதிகம் தெரியாததால் .விபரமாக எழுதமுடியவில்லை. இவரிடம் இருந்து வந்த சில கருத்துகளை வைத்து.இவரின் எண்ணத்திலும் சமூதாயத்தின் அக்கரை சந்தனமாய் மணம்வீச காண்கிறேன்.

சின்னக் காக்கா:
சின்னக் காக்கா
ஒரு
பெரிய தம்பி,
பருவத்தில் தம்பி...
சமூக
பார்வையில் காக்கா!

அன்பு நண்பன் அழகிய எண்ணங்களுக்குச்சொந்தகாரன். இன்னும் இவரிடம் இருந்து நிறைய எதிர்பார்கிறேன்.மருந்துபோலும்,விருந்துபோலும் வராமல் தொடர்ந்து வந்து கருத்து சொல்லிவிட்டும். ஆக்கங்கள் அனுப்பியும் தொடர்பில் இருக்கவும்.

மீராஷாஹ் (எம் எஸ் எம்):
ஏறத்தாழ எமக்கு
செல்லப்பிள்ளை எனினும்
எடுத்துரைக்கும் திறமையிலே
யாருக்கும்
சலைக்காப் பிள்ளை.

இவரின் தகப்பனார் வித்தகர் என்றால் இவரோ மொழிவிற்பனர்.வார்தை செரிவும்,அடர்தியும் இவரின் எழுத்தில் தெரியும் முதிர்ச்சி.இவரிடம் கற்றுகொள்ளனும் ஊடக பயிற்சி.இவரைபோன்ற இளைஞர்களின் முயற்சி. நாளைய சமுதாயத்தின் வளர்ச்சி.

அபு ஈஸா:
திட்டமிடும் நேர்த்தியை
இவரிடம்
பிச்சையாய்க் கேட்கலாம்.

அப்பப்ப லேசா வந்துட்டுபோனாலும் கணமாய் தந்துட்டுபோகும் சிந்தனையாளர். இவரின்ஆராய்ச்சி பாணி ரொம்ப மனதை ஈர்க்கக்கூடியது. வாழ்துக்கள் இன்னும் எழுதவும்.
-------------------------------------------------------------------------
அதிரை ஷஃபாத்:
செக்கடிக் குளமும்
செல்ல அலைகளும்
முக்குளித் தாராவும்
முல்லை மலரும்
என
மயக்கியவர்
தொடர
தற்போது தயக்கம் ஏனோ?

தம்பியை பார்த்து பல வருடம் ஆகிவிட்டன. நல்ல படிப்பாளி.பார்பதற்கு நேப்பாளி.இவரின் அன்னாளய மேடைப்பேச்சு கேட்டு சந்தோச பட்டவன் நான். இன்னும் மழையின் சாரல் தலைக்கு மேலே! சில்லென்ற காற்று கண்ணத்தை வருடிச்செல்கிறது.('சி'ல்கிறது)வண்டின் ஓசையும் ,இடியின் மிரட்டல் தொனியும் இன்னும் கேட்டுகொண்டிருக்கின்றன.மின்னல் பளிச்சென்றுமின்னிச்செல்கையில் கண் இமைகள் அனிச்சையாய் மூடிக்கொள்கிறது. என்று வரும் அன்று பேய்ந்து விட்டு போன மழை மருபடியும். கவிதைத்தாகம் தீர்க்க வருமா>மேகம் வந்தால் வரும்.MAY COME?

தாஜுதீன்:
யுத்த முடிவில்
பூத்த
புத்தம்புது பூ இவர்!
பதிவர் மனம் திரட்டி
அதிரைமணம் கண்டவர்!
இவர்
நாடுவது நலம்...
எனவே
இவரோடு
கூடுவரும் நலமே!

இளையவர்,இனியவர்,கிரிக்கெட்விளையாட்டில் நல்ல கேப்டனாய் செயல்பட்டவர். இங்கே சீரியஸாய் தலைமை பொறுப்பில் பார்க்கவே சந்தோசமாய் இருக்கிறது. காலம் இவ்வளவு பக்குவத்தை தமக்கு தந்திருக்கிறதா? சந்தோசத்திலும்,ஆச்சரியத்திலும் மனம் திண்டாடிபோகிறது.எத்தனை பொறுப்பு?பல நேரம் பணியின் நெருப்பு.இத்துடன் பொன்சிரிப்பு,அத்தனையும் தாண்டி இதை நடத்தும் பாங்கு தம்பி உடையான் படைக்கஞ்சான் அனால் இங்கு பெயரில் தம்பி தாங்கிய அண்ணன் உடையான் நீர் எதையும் தாங்குவீர்.

அதிரை நிருபரின் ஆஸ்தான கவி
இவரைபற்றி தனியே இந்த ஆக்கம் வரும் போழுது கருத்து சொல்கிறேன். மாலுமி இவரை பற்றி காலனிலை ஆராய்ந்துதான் வடிக்க முடியும் இல்லையென்றால் எப்படி இருவரியில் முடியும்?
-- CROWN
Thanks to :அதிரைநிருபர் குழு.
_____________________________________________________________________________________Reader's Comments:
அபுஇபுறாஹீம் சொன்னது…
கிரவுன்(னு)ரை க்கு முன்னுரையே சாட்சியே... என் கருத்தாக ! பதற்றத்திலும் பரிசு விழாவில் கலந்து கொண்ட பூரிப்பு கிரனுரையின் பதிப்பு....

Reply Friday, March 25, 2011 1:16:00 PM
Yasir சொன்னது…
சகோ.கிரவ்னிடம் இருந்து நம்மை பற்றிய அபிப்பிராயம் வருவது என்பது கின்னஸ் (கிரவுனின் நட்பு கிடைத்ததே என் வாழ்நாளின் சாதனைதான் ) புக்கில் என் பெயர் வந்தால் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்குமோ அதைவிட மேலாக உள்ளது
Reply Friday, March 25, 2011 1:28:00 PM

sabeer.abushahruk சொன்னது…
கிரவுனுரை:
சப்போர்ட்டுக்கு வரும் என்று பார்த்தால்
போட்டிக்கு வந்திருக்கிறது.
இது கிரவுனுரையல்ல
நான் எழுதாமல் விடுபட்ட முடிவுரை,
அதனால்தான் முடிவு அறிவிக்க இத்தனை காலமோ?
நான் சொல்ல தலைப்பட்டபோது
எனக்குமட்டும்
ஏன்
இத்தனை உதவிக்கு வராமல் வஞ்சித்துவிட்டதே
தமிழ்!
துவக்கித்திலேயே எழுதியிருந்தால்
இது
புத்தம் புது புத்தகத்திற்குப் போடும்
பிரவுனுரை
காத்திருக்கப்போய்தான்
கிடைக்கப்பெற்றோம்
இந்த
கிரவுனுரை

Reply Friday, March 25, 2011 3:03:00 PM
அபுஇபுறாஹீம் சொன்னது…
காக்கா ஒரு திருத்தம் ஆதலால் இனிமேல்....
//இது கிரவுனுரையல்ல
நான் எழுதாமல் விடுபட்ட முடிவுரை,//
அதிரைநிருபரில் "முடிவுரைகள்" பதிய வாய்பில்லை... ஆதலால் இது "நிறைவுரை" என்றுதான் தாங்கள் பதிந்திருக்க வேண்டும்... ஏன் என்றால் நிறைவான உரையே !

Reply Friday, March 25, 2011 3:16:00 PM
sabeer.abushahruk சொன்னது…
well said.
agreed abu iburahim

Reply Friday, March 25, 2011 3:37:00 PM
ZAKIR HUSSAIN சொன்னது…
to Bro; Crown,
ரத்தம் புதிதாகி 100 மீட்டர் ட்ராக்கில் ஸ்டார்ட்டிங் பாயின்ட்டில் உட்கார்ந்திருந்த உணர்வு என்னைப்பற்றிய உங்கள் எழுத்து படித்ததில்...இப்போதெல்லாம் யாரும் ஒரு Gift எதுவும் தருவதில்லை ..நாம் தான் மற்றவர்களுக்கு Gift கொடுக்கிறோம்.
உங்கள் தமிழ் வழி எனக்கு Gift கிடைத்த உணர்வு.
மற்றவர்களை பாராட்ட ஒரு பெருங்கடல் அளவு மனசு வேணும்...அது உங்க கிட்ட நிறைய இருக்கு.

Reply Friday, March 25, 2011 4:45:00 PM
UNICONCHENNAI சொன்னது…
Dear All.
Thanks to all members and well wishers of AN.
This is not a start because it will have end.
This is a cyclic process from beginning to end to beginning. I love the comments from all and it gives an eye opening for various topics. Keep it up.

Reply Friday, March 25, 2011 5:03:00 PM
அபுஇபுறாஹீம் சொன்னது…
அசத்தல் காக்கா : எப்புடி (எ/)உழுவுறீங்கள் கலப்பை பூட்டி தானே எங்களின் (வலை) மேய்ச்சலுக்கு விளைச்சல் காட்டுறீங்க ?

Reply Friday, March 25, 2011 5:24:00 PM
meerashah சொன்னது…
சகோ. சபீரும் கிரவுனும் எல்லாரையும் உசுப்பேத்தி இருக்கிறார்களே.. இதற்கு பகரமாக எல்லோரும், விரலுக்கேத்து வீக்கம் போல், ஊக்கத்திர்கேற்ப ஆளுக்கு ஒரு ஆக்கம் எழுதவேண்டுமென உத்தரவு வந்தாலும் வரும்..எதற்கும் ஒரு ஆக்கத்தோடு ரெடியா இரிங்க.
*******************************************************************************
msm (mr)
Reply Friday, March 25, 2011 5:53:00 PM
crown சொன்னது…
அதிரை நிருபரின் ஆஸ்தான கவி,சகோ.சபீர்.
------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.
இவர் கண்ணாடி போட்ட
சென்னை மேட்சின் நரேந்திரன் ஹிர்வானி
தமிழினாலும்,அன்பினாலும் இதயத்தை வீழ்த்துவதில்.
ஸ்பானர் பிடித்த கையில் பேனா பிடித்து,
இப்ப தட்டுஅச்சு மூலம் தமிழை வளர்த்து
வார்தைகளை தேவைக்கு ஏற்ப கழட்டி மாட்டவும்,
மாட்டி கழட்டவும் தெரிந்த தழிழையே
தலைகீழாய்,தலைக்குமேலாய் மாற்றத்தெரிந்த ( நெ )பொறியாளர்.
தரிசனம் கிடைக்காமல் போனாலும் இவரிடம் கரிசத்திற்கு குறைவில்லை.
அன்பு காட்டுவதில் இப்படி ஒரு அலுச்சாட்டியம் இவரிடம்
அதிகமாகத்தான் அன்பு காட்டுவேன் என்று.
எனக்கு ஒரு சந்தேகம் யாதெனில்
இவர் பிறரை முதுகை தட்டி கொடுப்பதற்குத்தான்
தன் கையை அதிகம் உபயோகிப்பாரோ?
நால்வரில் நடுவர் யார் பக்கமும் சாயதிருப்பதில்.
இவர் ஒரு பொக்கிஷம்,பொருமையாளி அதே வேளை
கண்டிக்கவேண்டிய நேரத்தில்
சிந்தைனையில் லார்வா குழம்பை ஊற்றி எழுதுபவர்.
அமைதியான கோபக்காரர் நியாயம் எடுத்துரைப்பதில்
அன்னையை போல் அன்பு காரன் அனைத்து வாழ்வதில்
இவர் மனதில் இடம் கிடைப்பதே நம் அதிர்ஸ்டம்
புகழுக்கு மயங்காதவர்,எல்லாப்புகழும் அல்லாஹுக்கே
என்பதை அழுத்தமாய் நம்பக்கூடியவர்.
நல்ல சகோதர நண்பர்.வாஞ்சையுடன் பாடம் சொல்லும் வாத்தியார்
ஆனால் சாதாரனமாணவனாக,மாணவனாக காட்டி கொள்பவர்.
குறும்புக்காரர், நையாண்டியிலும் தர்பார் நடத்துபவர்.
மொத்தத்தில் எங்கள் உயிர் சபீர்காக்கா.
அல்ஹம்துலில்லாஹ் ,அல்ஹம்துலில்லாஹ் எல்லாப்புகழும் அல்லாஹுக்கே.
Reply Friday, March 25, 2011 6:34:00 PM
Shameed சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும்
ஆக்கத்திற்கு ஒரு ஆக்கம் அதுவே எங்களுக்கு தந்தது பெரும் ஊக்கம்
புலி பதுங்குனது இந்த பாய்ச்சலுக்கு தானா

Reply Friday, March 25, 2011 6:50:00 PM

புலி பதுங்குனது இந்த பாய்ச்சலுக்கு தானா.
--------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நலாமா சகோதரரே!இப்பத்தான் மனசு லேசா இருப்பது
போல் உணருகிறேன்.அதில் இருந்த பாரம் போய்விட்டது இத்தனை வாரமாய்
எங்கே போய்விட்டீர்கள்?புலி பதுங்கல பாய,சளித்தொந்தரவும்,முதுகில் பிடிப்பும்
அதான் காரணம் ஒரு ரகசியம் சொல்கிறேன் பெருமைபட்டுகொள்ளவல்ல
அல்லாஹ்வின் கிருபையால் நான் நேரம் எடுத்து எதுவும் எழுதுவதில்லை.
எழுத சந்தர்பம்கிடைக்கும் போது எழுதுகிறேன். நேரம் ஒதுக்கி எழுத நான் ஒன்னும்
பெரிய எழுத்தாளனோ,பெரியவிஷயமோ எழுதவில்லைதானே? எல்லாப்புகழும்
அல்லாஹுக்கே.

Reply Friday, March 25, 2011 7:01:00 PM
harmys சொன்னது…
செஞ்சுரி அடித்த சபீர் காக்காவின் படைப்புக்கு
ஒரு ரீமிக்ஸ் .......
ரீமிக்ஸ் சிலநேரம் திகட்டும்
ஆனால் தஸ்தகீரின் இந்த ரீமிக்ஸ் தித்திக்கும் .............
தஸ்தகீரின் நேர்மையான ரசிப்பிற்கு
இதுவும் ஒரு பாக்ஸ் ஆபீஸ் .............
எப்படி இது ஒரு அரை செஞ்சுரி வரை நெருங்குமா ?

Reply Friday, March 25, 2011 7:33:00 PM
தாஜுதீன் சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்,
இதுவும் நல்லாதான் இருக்கு..
அன்பு பாசம் நேசம் நிறைந்த சகோதரர் தஸ்தகிர் அவர்களின் கிரவுனுரைக்கு மிக்க நன்றி.
என்னை கிரிக்கெட் கேப்டனாகவும் அறிந்து கருத்திட்டுள்ளீர், இன்னும் உங்கள் மைத்துனர் என் அருமை நண்பர் சமியுல்லாவிடம் நிறைய கேட்டுத்தெரிந்துக்கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
//காலம் இவ்வளவு பக்குவத்தை தமக்கு தந்திருக்கிறதா?//
நிச்சயமாக... இறைவனின் துனையும், உலக கல்வியும், மார்க்க கல்வியும், ஊக்கப்படுத்தும் உங்களைப் போன்ற நல்ல நட்புவட்டாரங்களும், சரியாக வழிகாட்டும் அனைத்து உறவுகளும் தான் நீங்கள் குறிப்பிட்டுள்ள பக்குவத்தை தந்துள்ளது என்று நம்புகிறேன். அல்லாஹ் நன்கறிவான்.
இங்கு மிக அருமையாக எல்லோரையும் உங்கள் பார்வையில் விவரித்தவிதம் மிக மிக அருமை.

Reply Friday, March 25, 2011 9:09:00 PM
தாஜுதீன் சொன்னது…
// Shameed சொன்னது…

புலி பதுங்குனது இந்த பாய்ச்சலுக்கு தானா//
அஸ்ஸலாமு அலைக்கும்,
நீங்க இங்கு வந்து கருத்திட்டது, சகோதரர் தஸ்கீருக்கு மட்டும் மன திருப்தியில்லை எங்கள் எல்லோருக்குமே மனதிருப்தி.
தங்களின் வேலை சிரமங்கள் நீங்க இறைவனிடன் துஆ செய்கிறேன்.
Reply Friday, March 25, 2011 9:24:00 PM

இத்தனை அன்பும்
எனக்கே எனக்கா?
என்னநான் செய்தேன்
இதயங்கள் வெல்ல?
நல்லதைச் சொல்கிறேன்
என்னுள்
நடப்பதைச் சொல்கிறேன்!
உள்ளதைச் சொல்கிறேன்
உலகத்தில்
உணர்ந்ததைச் சொல்கிறேன்!
அன்பினைத் தவிர
ஆயுதம்
அறிந்தவனில்லை நான்!
அதையே பிரயோகித்து
அத்தனை
அன்பரையும் பெற்றேன்!
நன்றி கிரவுன்!

Reply Saturday, March 26, 2011 12:16:00 AM
Yasir சொன்னது…
//என்னநான் செய்தேன்
இதயங்கள் வெல்ல?//சொல்லவும் வேண்டுமா ?? இதயத்தைமட்டுமா வெற்றீர்கள்..இமயம் அளவுக்கு எங்கள் பாசத்தையும் போனஸாக எடுத்து சென்று விட்டீர்கள்...வாழ்வின் பாக்கியம் உங்கள் நட்பு கிடைத்தது.
Reply Saturday, March 26, 2011 12:27:00 AM

2/08/2011
அன்பரே!
உங்கள் கவிதையை நாளெல்லாம்
கேட்டு கொண்டே இருக்கலாம் என்றாய்.
ஆனந்தம் அடைந்தேன்.
மேலும்,மேலும் கவிதை புனைந்தேன் ரசித்தாய்.
கவிதையை வைத்து காலம் தள்ளமுடியாதுன்னு
விட்டு சென்றுவிட்டாய்.
பின் நான் எழுதும் கவிதைகள் யாவும்
பத்திரிக்கை ,இணையத்தில்,
திரைப்பாடலாக விற்பனையில்
வீருனடை போட பணக்குவியல்,
புகழ் மழை என் மேல் ஆனாலும்,
அந்த கவிதைகளில் ஒரு வெற்றிடம் பார்கிறேன்.
ஊர் மெச்சினாலும் அந்த கவிதையில் உயிர் இருப்பதாக
எனக்கு படவில்லை.
நீ வாசிக்காத கவிதையும்,
நேசிக்காத படாத நானும்
உயிர் தாங்கியப்பிணம்.

2/01/2011
காதல் கிரீடம்.
காதல் ஜோதியே என்மேல் கோபமா-நான்
திரியாய் எரிவது உந்தன் சாபமா?
கண்களில் என்னடி காதலின் தாபமா
காணலாய் கனவுகள் கழிவதே லாபமா?
கண்களால் சொன்னதும் காற்றிலே போகுமா
காதலின் வேள்வியில் என் கட்டையும் வேகுமா
கனவுகள் கலைகையில் கண்ணீரும் ஏகுமா
என் கல்லறை கண்டு உன் கல்நெஞ்சு நோகுமா?
மாலையும் மடியும் மறத்தல் நியாயமா
மல்லிகை மணக்கும் மஞ்சமும் மாயமா
காலத்தால் உள்ளாற தீச்சுட்ட காயமா
கனவுகளைக் கட்டிப்போட மனதென்ன லாயமா
ரெட்டைஜடைப் பின்னலும் ஒற்றையடிப் பாதையும்
கடற்கரைக் காற்றும் கையருகில் நீயும்
அழகழகாய்ப் பூக்களும் அதனை மிஞ்சும் நீயும்
அத்தனையும் மறக்க அன்பே ஆகாது!
சாபமும் கோபமும் சடுதியில் மாறட்டும்
சந்தோஷ தருணங்கள் மறுபடி மலரட்டும்
ஊடலும் கூடலும் காதலின் வேஷங்கள்
உலகம் உணரட்டும் காதலர் பாஷைகள்!
-கவிகன்னல் சபீர்.

Subscribe to:
Posts (Atom)