1/26/2011

ஆதம் மகனே நியாயமா?

யார் நீ? தடித்த குரல் கேட்டு
திடுக்கிட்டு திரும்பினான்.
உன்னத்தான் எங்கே வந்தே?
மருபடியும் மிரட்டும் தொனியில் அதே நபர்.
என்ன காக்கா தொழத்தான்......
தொழவா? நீ எங்க ஜாமாதில்லையே!
இல்ல காக்கா நான் எந்த பிரட்சனையும் செய்யமாட்டேன்.
பிரட்சனை செய்யும் எண்ணமும் உள்ளதோ?
பழகிய குரல் கேட்டு மெல்ல திரும்பினான்.
அங்கே பால்ய சினேகிதன்
என்ன மாப்ள நல்ல ஈக்கியா?
நல்லா இருக்கேன் சரி ஆனா எங்கே வந்தே?
என்னா இப்படி கேக்குற தொழத்தான்....
நீ எங்கள் ஜாமாதில்லையே!
உங்க ஜாமாத்துன்னா????
நாங்க நாஜாத்! நீங்க சுன்னதுல் ஜமாத்!
என்ன இப்படி பிரிச்சு பேசுற?
சொல்றத கேட்டுக்க மருவாதையா
எங்கள் பள்ளி வாசலை விட்டு போய்விடு.
பழக்கமெல்லாம் முஹல்லாவுக்கு வெளியதான்.
(தொழ விடாமல் திருப்பி அனுப்ப பட்டார் அவர்)
***************************************************************

ஏய் யாரா நீ?
மரியாதைய பேசுங்க!
தொப்பிபோடாதவனுக்கு என்னடா மரியாத?
என்ன நடந்துச்சுன்னு இப்படி பேசுரிங்க?
இப்ப உங்களுக்கு என்ன வேண்டு(ம்)?
விரல ஆட்டுரவன், தொப்பி போடாதவன்
இந்த பள்ளிவாசலுக்கு தொழவோ
ஒன்னுக்கு இருக்க கூட வரக்கூடாது.
அத சொல்ல நீங்க யாரு?
நான் யாரா??? நான் யாரா????
(கேட்டுகொன்டே அவர் சத்தம் போட்டு பெரும் கூட்டம் சேர்த்து விடுகிறார்)
இங்க பாருங்க இந்த பொடிபய
என்ன யாருன்னு கேட்குரான்
விரல அசைக்கிறவன்,மதஹப நம்பாதவன்
யான்டா இங்கே வந்தேன்னு கேட்டாக்கா....
ஆமாங்க இவனுக்களுகெல்லாம் திமிரு ஜாஸ்தியாகிடுச்சு.
பலரும் நீதிபதியாகி தீர்ப்பு சொல்ல பாவம் அந்த இளைஞன்.
விரட்டி அடிக்கப்பட்டான் பள்ளி வாயிலின் வெளியே.
நமக்கு யாரும் எதிரிவேண்டாம் நம்மை சாய்க்க.
சகோதரனின் குறுதி கேட்டும் காலம் வந்தது எப்படி?
முஸ்லிம் எல்லாரும் சகோதரர்களா?
ஒற்றுமையின் கயிரை இப்படி துண்டு போடுவது முறையா?
மனசாட்சி கேட்டு தொலைக்குது!
சண்டைபோட்டு நம் சமூகம் அழியுது!
விடை கான முடியாமல் விம்மி அழுகிறேன்,
ஆருதல் சொல்லலாம் முடிவு கிடைக்குமா?

3 comments:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இவைகள் இன்று நடப்பவைகள் அல்ல... அன்று நடந்ததுதான் ஆனால் இன்னும் அதன் தாக்கம் பள்ளிவாசலுக்குள் இல்லாவிடினும் வெளியிலும் அவரவர் உள்ளங்களிலும் குடி கொண்டு குடில்களை தகர்க்கிறது என்னவோ மறுக்க முடியாத நிஜமே !

Unknown said...

எல்லோருக்கும் உள்ள மிஹப்பெரிய கவலை ..
என்று தீருமோ ?........................

sabeer.abushahruk said...

நானும் எனக்குத் தெரிந்தவர்களும் இதிலோ அதிலோ இல்லாமல் இருக்க, பிறகு இதில் அல்லது அதில் தீவிரமாக இருப்பது எவர்? தலை சுத்துதே கிரவுன்.

About Me